உடுமலை நகர பாஜக சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

நிர்வாகிகள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி ஆலோசனைப்படி மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில் நகர பாஜக சார்பில் மண்டல தலைவர் கண்ணாயிரம் தலைமையில் பட்டாசுகள் வெடித்தும் பேருந்து நிலையம் பகுதியில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது பின்னர் நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் கூறுகையில்... மகாராஷ்டிராவில் பல நல்ல திட்டங்கள் பாஜக கொண்டு வந்தன் காரணமாக தற்போது அமோக வெற்றி பெற்றுள்ளது ஆனால் தமிழகத்தில் பாஜக அரசின் திட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது இருப்பினும் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக அபார வெற்றி பெறுவது உறுதி என தெரிவித்தார். நிகழ்ச்சியில் நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, நகர துணைத் தலைவர் உமா குப்புசாமி , நகர செயலாளர்கள் மணிவண்ணன் , ஹரிகரன் ,ஜோதிடர் முருகேசன் , பாலசுப்பிரமணியம் , திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் கலா, மாவட்ட பிரச்சார அணி தலைவர் சின்ராஜ் ,மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் குருசாமி , மகளிர் அணி நகர தலைவர் ரதி ,ஹேமா, பூத் கமிட்டி நிர்வாகிகள் நந்தகோபால் தங்கவேல் பழனிச்சாமி ராஜேஷ் வைர பிரகாஷ் வெங்கடாசலம் தட்சிணாமூர்த்தி பட்டியல் அணி தலைவர் பழனிச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Next Story