முன்விரோத காரணமாக ஆடுகளைக் கொன்ற இளைஞர் கைது.
Paramathi Velur King 24x7 |23 Nov 2024 3:30 PM GMT
கந்தம்பாளையம் அருகே முன் விரோத காரணமாக ஆடுகளைக் கொன்றதாக இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பரமத்தி வேலூர். நவ, 23: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நல்லூர் கந்தம்பாளையம் அருகே உள்ள குன்னமலை அத்திக்காடு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் சௌந்தர்ராஜன் (32) விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்த ராஜூ என்பவரது மகன் மனோஜ் (24). இவர்கள் இரண்டு குடும்பத்திற்கும் கடந்த 2022ஆண்டு முதல் சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி அன்று மீண்டும் இரண்டு குடும்பத்தாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மனோஜ் சௌந்தரராயர்ஜனை தாக்கியுள்ளார். இதில் அவருக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆத்திரமடைந்த மனோஜ் சௌந்தர்ராஜன் வளர்த்து வந்த ஐந்து ஆடுகளை கோபத்தில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மூன்று ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டன. இரண்டு ஆடுகள் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றன. சம்பவம் குறித்து சௌந்தர்ராஜன் நல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகார் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மனோஜை கைது செய்து பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பரமத்தி கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story