ஆதரவற்றவர்களுக்கு போர்வை வழங்கிய குழு
Tirunelveli King 24x7 |24 Nov 2024 1:28 AM GMT
முகநூல் நண்பர்கள் குழு
நெல்லை மாநகரில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்த நிலையில் இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் அதிக அளவு காணப்படுகின்றது. இந்த நிலையில் முகநூல் நண்பர்கள் குழு சார்பில் நேற்று (நவம்பர் 23) இரவு நெல்லை அரசு மருத்துவமனை முன்பு உள்ள ஆதரவற்றவர்களுக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் செய்திருந்தார்.
Next Story