கல்லூரி பேராசிரியை தூக்குபோட்டு தற்கொலை!

கல்லூரி பேராசிரியை தூக்குபோட்டு தற்கொலை!
நாசரேத்தில் கல்லூரி பேராசிரியை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் கல்லூரி பேராசிரியை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மார்க்கெட் தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் மனைவி ஜெர்லின் கோல்டா (26). இவர் அங்குள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2019 ஆண்டு திருமணம் ஆனது. நான்கு வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில், அவர் தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் டாக்டர் அவரை வீட்டில் எதுவும் வேலை செய்யக் கூடாது ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறினாராம். இந்நிலையில் வீட்டில் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் வாழ்க்கையில் ஜெர்லின் கோல்டா நேற்று இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாசரேத் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜின் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story