விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை..!
Namakkal King 24x7 |24 Nov 2024 12:30 PM GMT
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என, தமிழக விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... மத்திய பாஜக அரசு 3-வது முறையாக ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு, 2024-25 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்திற்கும் குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யப்படும் என்று அறிவித்தனர்.ஆனால் இதுவரையிலும் குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வதற்கு மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை, இது கண்டிக்கத்தக்கது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தங்கள் உரிமைக்காக தொடர்ந்து போராடும் நிலையே உள்ளது.இதை மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து அறிவிக்க, மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story