அரசு விழாக்கள் கல்வெட்டுகளில் பாரபட்சம்: எம்எல்ஏ குற்றச்சாட்டு
Paramathi Velur King 24x7 |24 Nov 2024 2:05 PM GMT
அரசு விழாக்கள், கல்வெட்டுகளில் எனது பெயரை இடம் பெறச் செய்யாமல் வேண்டுமென்றே புறக்கணிப்பதாக பரமத்தி வேலூர் எம்எல்ஏ எஸ்.சோர் குற்றம்சாட்டியுள்ளார்.
பரமத்தி வேலூர், நவ 23: பரமத்தி வேலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எஸ்.சேகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சட்டப்பேரவையில் நான் வைத்த கோரிக்கையை ஏற்று, 2022 நவம்பர் மாதம், பரமத்தி வேலூர் தொகுதிக்கு தீயணைப்பு நிலையம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதற்காக கபிலர்மலையை அடுத்த பெரிய சோளிபாளையம் ஊராட்சி, சிறுகிணத்துப்பாளையம் கிராமத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு இரண்டு வரு டம் ஆகிறது. ஆனால், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அங்கு தீயணைப்பு நிலையம் அமைக்கும் பணியை முடக்கியுள்ளது. பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணியையும் வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகிறது. ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் பொது மக்கள் பாதுகாப்பாக குளிக்க அனுமதி வேண்டியும், சுற்றுலாவை மேம்படுத்தவும், மீன் பிடி தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தவும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். ஆனால், நான் கொண்டுவரும் அனைத்து மக்கள் நலத்திட்டப் பணிகளையும் திமுக அரசு தொடர்ந்து முடக்கி வருகிறது. அதுபோல பரமத்தி வேலூர் விழாக்கள் நடைபெற்றால் எனக்கு முறையாக அழைப்பிதழ்கள் வழங்குவதில்லை. அங்கு வைக்சுப்படும் கல்வெட்டுக ளிலும் எனது பெயர் தொடர்ந்து புறக்கணிக் சுப்பட்டு வருகிறது. அரசு விழாக்களில் கலந்துகொள்ளாத, பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்கள்கூட கல்வெட்டுகளில் பொறிக்கப்படுகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் அதிமுக தலைமையிடத்தின் அனுமதி பெற்று பொது மக்களுடன் சேர்ந்து அரசைக் கண்டித்து போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளேன் என்றார்.
Next Story