பரமத்தி வேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கத்தோடு, பணம் திருடிய மாம நபர்கள்.
Paramathi Velur King 24x7 |24 Nov 2024 2:10 PM GMT
பரமத்தி வேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கத்தோடு, பணம் திருடிய மாம நபர்கள் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர், நவ.24- காங்கேயம் தேய தாலுகா, திருப்பூர் மாவட்டம் கருந்தேவிக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் டிப்பர் லாரி டிரைவர். பரமத்தி வேலூர் பேட்டையில் கடந்த 1 மாதமாக வாடகை வீட்டில் தங்கி தனது மனைவி யசோதாவுடன் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் உடுமலைப்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க காரியத்திற்கு சென்று விட்டு மறுநாள் அதிகாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது செ கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ திறந்த நிலையில் துணிமணிகள் கலைக்கப்பட்டு கிடந்துள்ளது. மேலும் பீரோவில் இருந்த 1 பவுன் தங்க தோடு மற்றும் ரொக்கம் ரூ.5 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து ரஞ்சித்குமார் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் - வழக்குப்பதிவு செய்து தங்கத்தோடு மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story