நாமக்கல் தமிழ்ச்சங்கம் சார்பில் மாதேஸ்வரன் எம்.பி.க்கு பாராட்டு விழா !
Namakkal King 24x7 |24 Nov 2024 4:16 PM GMT
நாமக்கல் மாவட்டம் பசுமை செழிக்கும் மாவட்டமாக உருவாக்கிட பாடுபடுவோம் என நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் எம்எல்ஏ உறுதியளித்துள்ளனர்.
நாமக்கல் தமிழ்ச்சங்கம் சார்பில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பிக்கு பாராட்டு விழா நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தங்கம் மருத்துவமனை கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாதேஸ்வரன் எம்பிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நாமக்கல் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் மருத்துவர் குழந்தைவேல் தலைமை தாங்கினார், தமிழ்ச்சங்கத்தின் மதிப்புறு தலைவர் சனு சத்தியமூர்த்தி, அமைப்பு தலைவர் முனைவர் அரசு பரமேஸ்வரன், பொருளாளர் வெங்கடேசன் மற்றும் கருப்பண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நாமக்கல் தமிழ்ச்சங்கத்தின் இணைச் செயலாளர் முனைவர் யுவராஜ் கோபால்சாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.தமிழ்ச்சங்கத்தின் செயலர் முனைவர் நாராயணமூர்த்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.பாராட்டு விழாவில் பங்கேற்று பேசிய சிறப்பு விருந்தினர்கள் பேசியது விவரம் வருமாறு.... திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் மற்றும் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் தமிழ்ச்சங்க பாராட்டு விழாவில் பங்கேற்று , நாமக்கல் மாவட்ட மக்கள் பயன் பெற மண்ணும் மக்களும் பயனுறும் நல்ல திட்டங்களை செயல்படுத்துவோம் என நம்பிக்கை விதைகளை மனதில் விதைத்து சென்று உள்ளனர். காலிங்கராயன், தீரன் சின்னமலை போல மண்ணும் மக்களும் பயன் பெற பாடுபடுவோம் கூறியது மகிழ்சியளிக்கிறது என்றனர், மேலும் திருமணி முத்தாற்றில் காவிரி உபரி நீர் இணைத்து சேலம் நாமக்கல் மாவட்டங்கள் பசுமை செழிக்கும் மாவட்டமாக உருவாகிட பாடுபடுவோம் என உறுதியளித்துள்ளனர். தமிழ் அமைப்புகள் சமூக சேவை வணிக நிறுவனங்கள் தாங்கள் சிந்தனை செயல்களுக்கு உறுதுணையாக நிற்போம் என்பதை உறுதியளிக்கிறோம், தாங்கள் வருகை தந்து சிறப்பித்தமைக்கு தமிழ்ச் சங்கம் பொது நல அமைப்புகள் சார்பாக உளமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறோம். அரசியலில் புதிய நாகரிகம் பண்பாடு கலாச்சாரத்தை புகுத்தி ஒவ்வொரு தனி மனிதனும் தொழில் முனைவோராக உருவாக்கிட வேண்டும் தொழில் செய்த நேரம் போக மீதம் உள்ள நேரம் மக்கள் சேவை ஆற்ற அரசியல் வர வேண்டும், புதிய பரிணாமம் அரசியலில் புதிய கலாச்சாரம்,நேர்மையான சமூகம் மேம்பட்ட சமூகம் உருவாகிட சிறப்பான முன் எடுப்பு மக்களின் குரல் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் ஓங்கி ஒலிக்கட்டும் கொங்கு மண்டலம் இந்தியாவிற்கு வழி காட்டிட வேண்டும் என்று பேசினார்கள்.நல்லாசிரியர் விருது பெற்ற எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் செல்வ.செந்தில் குமாருக்கு நாமக்கல் தமிழ்ச்சங்கம் மூலம் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் நாமக்கல் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நாமக்கல் தமிழ்ச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பசுமை தில்லை சிவக்குமார் நன்றி கூறினார்.
Next Story