நாமக்கல்: கோரிக்கைகளை வலியுறுத்தி வணிகர் சங்கம் கடை அடைப்பு போராட்டம்.

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரும் அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயனிலை ஏற்றி இறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இன்று நாமக்கல்லில் கடைகள் அடைப்பு.
நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரும் அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இன்று வர்த்தக நிறுவனங்கள் மளிகை கடைகள் துணிக்கடைகள் கடையடைப்பு புதிய பேருந்து நிலையத்திலிருந்து வரும் பேருந்துகள், பேருந்து நிலையத்திற்குள் வராமல், போக்குவரத்து நெரிசல் மிக்க மெயின் ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குவதால் ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது. எனவே அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும். பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் செல்லாத காரணத்தால், பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும், வணிக நிறுவன பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பெரும் சிரமத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். அதை உடனே தடுத்த நிறுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலத்தில் இருந்து வரும் பேருந்துகள் 7 கிலோமீட்டர் முன்னதாக முதலைப்பட்டியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கிவிடுவதால், பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டும். ⁠வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் ஐயத்தை போக்கிடும் வகையில், தற்போது உள்ள பழைய பேருந்து நிலையம் நகர பேருந்து நிலையமாக நிரந்தரமாக செயல்படும் என்கிற உறுதியை மாவட்ட நிர்வாகம் அளிக்க வேண்டும். பழைய பேருந்து நிலையத்திற்கும் புதிய பேருந்து நிலையத்திற்கும் இடைய கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் சங்கத்தினர் தங்களது மருந்து கடைகளை வருகிற 25ம் தேதி காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடையடைப்பு செய்வதாகவும், பிற வணிக நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு செய்வதாகவும் உறுதியளித்து இன்று வணிகர் சங்க பேரமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து கடையடைப்பு நடத்தி வருகின்றனர் இதனால் நாமக்கல் நகரில் பிரதான சாலை கடைவீதி திருச்சி சாலை துறையூர் சாலை திருச்செங்கோடு சாலை பரமத்தி சாலை ஆகிய ஆகிய சாலையில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு வணிகர் சங்கத்துக்கு முழு ஆதரவு தெரிவித்து வருகின்றன வருகின்றன இருப்பினும் ஒரு சில டீக்கடைகள் பேக்கரி கடைகள் திறந்திருக்கிறது பழைய பேருந்து நிலையத்தில் வழக்கம்போல் பேருந்து நிலையத்தில் வெளியே பயணிகள் பஸ் ஏற காத்துக் கொண்டுள்ளனர் கடை ஊழியர்கள் விடுமுறை அறிவித்து உள்ளனர்
Next Story