கோபி அருகே வாய்க்காலில் இழுத்து செல்லப்பட்ட தொழிலாளி கதி என்ன? தேடும் பணி தீவிரம்
Bhavanisagar King 24x7 |25 Nov 2024 7:27 AM GMT
கோபி அருகே வாய்க்காலில் இழுத்து செல்லப்பட்ட தொழிலாளி கதி என்ன? தேடும் பணி தீவிரம்
கோபி அருகே வாய்க்காலில் இழுத்து செல்லப்பட்ட தொழிலாளி கதி என்ன? தேடும் பணி தீவிரம் கோபி அருகே உள்ள காவிலிபாளையம் குட்டகம்ரோட்டை சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் நேற்று தனது மனைவி கலாமணியுடன் உக் உக்கரம் கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றார். பின்னர் அங்கு கலாமணி துணி துவைத்து கொண்டிருந்தார். முத்துச்சாமி வாய்க்காலில் இறங்கி குளித்தார். அப்போது தண்ணீர் அதிகமாகவந்ததால் அவர் வாய்க்காலில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார். இதை பார்த்தகலாமணி அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து அங்கு குளித்து கொண்டிருந்தவர்களிடம் கூறினார். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கு வந்து முத்துச்சாமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. பின்னர் இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத் துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்குசென்று வாய்க்காலில் இறங்கி முத்துச்சாமியை தேடும் பணியை தொடங்கினர். மாலை 5.30 மணி மணி வரையும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. அதன்பின்னர் இருட்டாகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. முத்துச்சாமி கதி என்ன? என்று தெரியவில்லை. இன்று (திங்கட்கிழமை) 2-வது நாளாக அவரை தேடும் பணி நடக்கிறது. மேலும் இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Next Story