திராவிடர் கழகத்தின் சார்பில் திருச்செங்கோட்டில் ஐம்பெரும் விழா
Tiruchengode King 24x7 |25 Nov 2024 8:39 AM GMT
திராவிடர் கழகத்தின் சார்பில் திருச்செங்கோட்டில் ஐம்பெரும் விழா
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் அண்ணா கலைஞர் பிறந்தநாள் விழாக்கள் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா திராவிட நாகரிக பிரகடன நூற்றாண்டு விழா என ஐம்பெரும் விழா சூரியம்பாளையம் செங்குந்தர் திருமண மஹாலில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு தந்தை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார் திராவிடர் கழக நாமக்கல் மாவட்ட தலைவர் எ கே குமார் அனைவரையும் வரவேற்றார் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளர்களாக திராவிடர் கழக தலைவர் வீரமணி தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய திராவிடர் கழக தலைவர் வீரமணி கூறியதாவது கோடானு கோடி மக்கள் ஊமையாக இருந்து விடக்கூடாது என உருவான இயக்கம் சுயமரியாதை இயக்கம் ஒவ்வொரு துளி ரத்தம் சிந்தாமல் சமூக மாற்றத்தை உருவாக்கியவர் தந்தை பெரியார் எத்தனை புது கட்சிகள் வந்தாலும் அடிக்கடிக்க பந்து போல் இயலும் இயக்கம் தான் திராவிட இயக்கங்கள் மகளிருக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றி இருந்த போதும் ஆயிரம் ரூபாயை உரிமைத்தொகை என வழங்கி அவர்களுக்கு அனைத்திலும் உரிமை உள்ளது என்பதை நிலைநாட்டியவர்முதல்வர் ஸ்டாலின்.சட்டமேதை அம்பேத்கர் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என சட்டம் இயற்ற முடியாத நிலையில் 1929 சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்தை செயலாக்கி சட்ட வடிவம் ஆக்கியவர் கலைஞர்.திராவிடம் என்றால் என்ன என பலர் கேட்கிறார்கள் திராவிடன் என்பதற்கு ரத்தப் பரிசோதனை செய்து கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை பண்பாட்டியலில் ஒருவர் திராவிடரா இல்லையா என்பதை தெரிந்து விடும்.காமாட்சி மீனாட்சி விசாலாட்சி என கடவுள்கள் பெண் கடவுள்களாக ஆட்சி செய்கிற நமது மண்ணில் பெண்கள் ஆட்சி செய்ய 50 சதவீத இட ஒதுக்கீடை வழங்கியது திராவிட இயக்கம் அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை செயல்படுவோம் கொடுத்தது திராவிட இயக்கம் இன்று கேரளாவில் பெண்கள் கூட அர்ச்சகராக உள்ளனர் யாரையும் வெறுப்பது அல்ல அரணைப்பதுதான் திராவிடம் எனக் கூறினார்.முன்னதாக இ டி கணேசனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெற்றது.இதனைத் தொடர்ந்துகுச்சிபாளையம் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் தர்ஷன் என்ற மாணவர் 100 திருக்குறளை ஒப்புவித்தார் இவரை திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பாராட்டி சால்வை அணிவித்தார்.நிகழ்ச்சியில் திருச்செங்கோடு திமுக ஒன்றிய செயலாளர்வட்டூர் தங்கவேல் எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், தங்கவேல் மதிமுக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் மாவட்ட திமுக அவை தலைவர் நடன சபாபதி தலைமை செயற்குழு உறுப்பினர் மாயவன் மாவட்ட துணை செயலாளர் சாந்தி தி.க.தலைமைக் கழகபேச்சாளர் ஜெயராமன் தலைமை கழக அமைப்பாளர்கள் ஈரோடு சண்முகம்,ஊமை ஜெயராமன் நாமக்கல் மாவட்ட செயலாளர் பெரியசாமி குமாரபாளையம் நகர தலைவர் சரவணன்ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story