அசத்திய அன்பில் மகேஷ் அமைச்சரால் மகிழ்ந்த ஊர் மக்கள்.
Namakkal (Off) King 24x7 |25 Nov 2024 11:57 AM GMT
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று 'அரிசன் காலனி' என்ற பெயரில் இருந்ததை மாற்றும் செய்ய வேண்டும் எனும் ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை மாற்றினார்
மேலும் "ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு" என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான அரசாணையை பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கி, இதற்காக போராடிய ஊர் பெரியவர் கணேசன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார்.இக்கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற வழக்கறிஞர் G.அன்பழகன் அவர்களிடம் ‘ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை தெரிவித்தார். திடீரென்று மல்லசமுத்திரம் கிராமத்திற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வருகை தந்ததால் ஊர்மக்களும், ஆசிரியர்களும் ஒன்று கூடினார்கள். தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற நேரடியாக வந்ததை அறிந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்கள்.இதுதொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ‘கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்’ என கலைஞரின் வரிகளைக் குறிப்பிட்டுள்ளார்.
Next Story