சட்டவிரோதமாக மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்ப்புலிகள் கட்சி புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார்..
Rasipuram King 24x7 |25 Nov 2024 2:14 PM GMT
சட்டவிரோதமாக மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்ப்புலிகள் கட்சி புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார்..
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுடைய வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் விதமாகவும், பொதுமக்களுடைய பொருளாதார சுண்டல்களை ஏற்படுத்தும் விதமாகவும் மதுபானங்களை பன்மடங்கு விலை உயர்த்தியும், பல்வேறு இடங்களில் சட்டத்திற்கு எதிராக சந்து கடைகளும், உரிமம் இல்லாத இடங்களில் மது அருந்த அனுமதிக்க கூடிய பலப்பகுதிகள் இயங்கி வருகிறது. எனவே இந்த செயல்பாடு என்பது முற்றிலுமாக தமிழ்நாடு அரசின் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து சட்டவிரோதமான மது விற்பனையை அரங்கேற்று வருகின்றனர். எனவே சட்டவிரோதமான மது விற்பனை என்பது கடும் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பவர்கள் மீதும், நடத்துபவர்கள் மீதும் உரிமம் இல்லாத இடங்களில் மது அருந்த அனுமதிக்க கூடிய நபர்கள் மீதும் தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்டம் 2024 இன் கீழ் பிணையில் வராத வகையில் வழக்கு பதிவு செய்து மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழ்ப்புலிகள் கட்சியின் நாமக்கல் மத்திய மாவட்டத்தினுடைய மாவட்ட செயலாளர் டாக்டர்.த.குமரவேல் தலைமையில் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் நிர்வாகிகள் புகார் மனு வழங்கினர்.
Next Story