காட்டு முன்னூர் அருகே வேகமாக சென்ற ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்து. ஒருவர் உயிரிழப்பு.
Karur King 24x7 |25 Nov 2024 2:21 PM GMT
காட்டு முன்னூர் அருகே வேகமாக சென்ற ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்து. ஒருவர் உயிரிழப்பு.
காட்டு முன்னூர் அருகே வேகமாக சென்ற ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்து. ஒருவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், வேட்டமங்கலம், உன்னூத்தூர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் வயது 36. ஆம்னி வேன் டிரைவர். இவர் நவம்பர் 23ஆம் தேதி அதிகாலை 3:45- மணியளவில் கோவையில் இருந்து கரூர் நோக்கி அவரது ஆம்னி வேனை ஓட்டி வந்தார். இந்த வேனில், கரூர் மாவட்டம்,நொய்யல் அருகே, வேட்டமங்கலம், அண்ணா நகர், குறுக்கு சாலையைச் சேர்ந்த ரவி வயது 50 என்பவர் உடன் வந்தார். இந்த வேன் காட்டுமுன்னூர் பிரிவு அருகே வரும்போது, ஆம்னி வேனை வேகமாக ஓட்டியதால், எதிர்பாராத நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேனில் பயணித்து வந்த ரவிக்கு தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை பிஎஸ்ஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி நவம்பர் 24ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த ரவியின் மகள் சஞ்சனா வயது 18 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஆம்னி வேனை அஜாக்கிரதையாகவும், வேகமாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பிரபாகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் க.பரமத்தி காவல்துறையினர்.
Next Story