மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் மாவட்ட செயலர் தேர்வு
Komarapalayam King 24x7 |25 Nov 2024 3:06 PM GMT
குமாரபாளையத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் மாவட்ட செயலர் தேர்வு செய்யபட்டார்.
நாமக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9-வது மாவட்ட மாநாடு குமாரபாளையத்தில் ஆனங்கூர் சாலையில் அமைந்துள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் நவ. 24, 25ல் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி, முருகேசன்,சந்திரமதி உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். மாநாட்டு கொடியினை மாவட்ட செயற்குழு உறுப்பினர் .ரங்கசாமி ஏற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டி பேசினார். மாவட்ட குழு செயலாளர் கந்தசாமி வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாநாட்டை வாழ்த்தி மாநில குழு உறுப்பினர் உறுப்பினர் மாரியப்பன் பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் முத்துகண்ணன் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசினார். .இந்த மாநாட்டில் 35 பேர் கொண்ட புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட செயலாளராக கந்தசாமி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில் தீர்மானங்களாக விவசாயிகளை பொதுமக்களை என பல்வேறு தரப்பினரை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும், மின்வாரியத் துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், குமாரபாளையம், பள்ளிபாளையம், வெப்படை, கல்லாங்காட்டுவலசு, திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கஞ்சா போதை வஸ்துகளின் விற்பனை அதிகளவு உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். போதை மாத்திரை உட்கொண்டதால் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே காவல்துறையினர் இதில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், பஞ்சாலை தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த குறைந்தபட்ச சம்பளம் 544 ரூபாய் வழங்கிட வேண்டும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணத்தின் போது வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகையை மத்திய அரசு மீண்டும் வழங்கிட வேண்டும், நாமக்கல் மாவட்டத்தின் ஜீவ ஆதாரமாக இருப்பது மேட்டூரில் துவங்கி தஞ்சை மாவட்டம் வரை செல்லும் காவிரி நீராகும். குமாரபாளையம் தொடங்கி கரூர் மாவட்டம் சென்று திருச்சி வழியாக தஞ்சையை சென்றடைகிறது. இந்த காவிரி ஆற்றில் சாக்கடை கழிவுநீரும் சாய ஆலைகளின் ரசாயன கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யாமல் நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய மோசமான அழிவை உருவாக்குகிற செயலை தடுத்து நிறுத்திட வேண்டும், சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கவும், அதனை செயல்படுத்தவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..
Next Story