வெள்ளியணை அருகே மின் கம்பத்தில் பணியாற்றிய தொழிலாளி மின்சாரம் தாக்கியதால் கீழே விழுந்து சிகிச்சை பலனின்று உயிரிழப்பு.

வெள்ளியணை அருகே மின் கம்பத்தில் பணியாற்றிய தொழிலாளி மின்சாரம் தாக்கியதால் கீழே விழுந்து சிகிச்சை பலனின்று உயிரிழப்பு.
வெள்ளியணை அருகே மின் கம்பத்தில் பணியாற்றிய தொழிலாளி மின்சாரம் தாக்கியதால் கீழே விழுந்து சிகிச்சை பலனின்று உயிரிழப்பு. கரூர் மாவட்டம், மணவாடி அருகே உள்ள மருதம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் வயது 50. இவர் வெள்ளியனை ஊராட்சி அலுவலகத்தில் தெருவிளக்குகள் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில் நவம்பர் 16ஆம் தேதி மதியம் 1:30 மணி அளவில், வெள்ளியணை ஊராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள மின்கம்பத்தில் மின்விளக்குகளை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத நிலையில் சிறிய அளவிலான மின்சாரம் தாக்கி மின் கம்பத்திலிருந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி நவம்பர் 24ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த செல்வராஜின் மகன் அன்பரசு வயது 27 என்பவர், அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்பட்ட காவல்துறையினர் உயிரிழந்த செல்வராஜின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பிவைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்
Next Story