பஞ்சமாதேவி அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் மூன்று பேர் படுகாயம்.
Karur King 24x7 |26 Nov 2024 2:56 AM GMT
பஞ்சமாதேவி அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் மூன்று பேர் படுகாயம்.
பஞ்சமாதேவி அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல் மூன்று பேர் படுகாயம். கரூர் மாவட்டம், நெரூர் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் வயது 46. இவரும் கரூர் அரங்கநாதன் பேட்டையைச் சேர்ந்த செல்வகுமார் மகன் குருமூர்த்தி வயது 19 ஆகிய இருவரும் நவம்பர் 23ஆம் தேதி இரவு 7:30 மணி அளவில், கரூரிலிருந்து நெரூர் செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். இவர்களது வாகனம் பஞ்சமாதேவி பகுதியில் செயல்படும் நவஜீவன் பள்ளி அருகே சென்ற போது, எதிர் திசையில் கரூர் அரங்கநாதன் பேட்டை பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் கிரன் வயது 19 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், ஜெகதீசன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு வாகனங்களும் சாலையில் விழுந்ததால், வாகனத்தில் பயணித்த மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். மூன்று பேரையும் மீட்டு, கரூரில் உள்ள நாதன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ஜெகதீசனின் தாயார் ராமாயி வயது 60 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கிரண் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Next Story