புதுக்கோட்டை: கலைஞர் கனவு இல்லம்: கலெக்டர் அழைப்பு!

புதுக்கோட்டை: கலைஞர் கனவு இல்லம்: கலெக்டர் அழைப்பு!
அரசு செய்திகள்
புதுகை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கலைஞ ரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதுகை மாவட் டத்துக்கு 2024-25ம் ஆண்டு நிதியாண்டில் 3 ஆயிரத்து 250 புதிய வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயனா ளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பயனாளிகள் அதிகபட்சம் ரூ. ஒரு லட்சம் வரை வங்கி கடனுதவி பெறலாம். இதன்படி வீடுகள் கட்ட ஒதுக்கீடு பெற்ற பயனாளி கள் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர்க ளிடம் இருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று தங்கள் பகுதிக்கான அரசுடமைக்கப்பட்ட வங்கிகள் அல்லது மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் சமர்ப் பித்திடலாம். அனுமதிக்கப்படும் கடன் தொகைக்கு ஈடாக வீடுகட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்து பெறப்பட்ட அசல் உத்தரவு ஆணையை அடமான மாக வங்கியில் அளிக்க வேண்டும். கடன் தொகையை 10 ஆண்டுகளில் 9 சதவீத வட்டியுடன் மீள செலுத் திடலாம். இத்திட்டத்தில் பயனடைய உள்ள பயனா ளிகளின் குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆகவும், அதிகபட்ச வயது வரம்பு 60 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 55 வயதுக்கு மேற்பட்ட பய னாளிகளுக்கு அவரது கணவர் அல்லது மனைவியின் பெயரில் கூட்டாக கடன் தொகை அனுமதிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story