அதிகாரிகளை விமர்சித்து போஸ்டர் சமூக ஆர்வலர் மீது வழக்கு பதிவு!

குற்றச் செய்திகள்
விராலிமலை தாலுகாவுக்கு உட் பட்ட காரப்பட்டு நீர்பழனி கிராமத்தில் 3.9 எக்டர் பரப்பளவில் உள்ள புதுக்கு ளத்தில் சிலர் ஆக்ரமிப்பு செய்துள்ள தாகவும், அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய் யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி இந்த ஆக்ரமிப்புகளை 8 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என்று கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார். ஆனால், 6 ஆண்டுகளாகியும் ஆக்ரமிப்பு அகற்றப்படவில்லை.இந்நிலையில் இந்த விவகாரத்தில் அதிகாரிகளை குற்றம் சாட்டி கறம்பக்குடி அருகே உள்ள குளந்திரான்பட்டு கிராமத்தை சேர்ந்தசமூக ஆர்வலரான துரை குணா மற்றும் காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஆறுமு கம் ஆகியோர் கோர்ட் உத்தரவை நடை முறைப்படுத்துவதில் அதிகாரிகளுக்குள் யாருக்கு அதிகாரம் என்ற குழப்பத்தை தீர்த்து வைக்கும் விதமாக மாபெரும் சிறப்பு பட்டிமன்றம் நடத்தப்படும் என்ற வாசகங்களுடன் நுாதன் போஸ் டர்களை அச்சிட்டு வெளியிட்டனர். இதுதொடர்பாக நீர்பழனி கிராம நிர்வாக அலுவலர் செல்லபாண்டியன் அளித்த புகாரின்பேரில், மண்டையூர் போலீசார் வழக்குப்பதிந்து அதிகாரிகள் குறித்து அவதுாறு கருத்துகளை பொது வெளியில் பதிவிட்டதாக கூறி துரை குணா, ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
Next Story