விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

அரசு செய்திகள்
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா, புதுகை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்று அதிகமாக வீசும் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.இதனால் மறு அறிவிப்பு வரும் வரை புதுகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
Next Story