மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா
Thirukoilure King 24x7 |26 Nov 2024 4:08 AM GMT
விழா
திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள மெய்ப்பொருள் நாயனார்க்கு குருபூஜை விழா நடந்தது. நாயன்மார்கள் 63 பேர்களில், விபூதியையும், சிவனடியாரையுமே சிவனாக கண்டு போற்றியவர் திருநீற்று செல்வர் என்று போற்றப்பட்டு, திருக்கோவிலுாரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தவர் மெய்ப்பொருள் நாயனார்.கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் சித்தி வளாகம் அமைந்துள்ளது. திருக்கோவிலுார் மெய்ப்பொருள் நாயனார் சித்தி வளாக வழிபாட்டு மன்றத்தின் சார்பில் 21 வது குருபூஜை விழா நேற்று நடந்தது. செத்தவரை தர்ம பரிபாலன டிரஸ்ட் சுவாமிகள் சிவஜோதி மோன சித்தர் இடப்பக் கொடியை ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். திருவண்ணாமலை, மாயம் துறவிய சங்க தலைவர் ஜீவா, எலந்தம்பட்டு அருணாச்சலம், விருத்தாசலம் 63 திருப்பணி மன்ற நிர்வாகி சங்கர், விழுப்புரம் சங்கர்ஜி முன்னிலை வகித்தனர். இட்டலிங்க ஆத்ம லிங்க மூர்த்தி களுக்கு, சிவனடியார்கள் அபிஷேக ஆராதனை, மலர் வழிபாடு, ஒலி வழிபாடுகளை செய்கின்றனர். தொடர்ந்து மெய்ப்பொருள் நாயனார் மூலமூர்த்திக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 3:00 மணிக்கு மெய்ப்பொருள் நாயனார் சொற்பொழிவு, ஜீவ சீனிவாசனின் இசை சொற்பொழிவு நடந்தது. ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
Next Story