பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை
Tirunelveli King 24x7 |26 Nov 2024 4:37 AM GMT
தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள ஸ்ரீ ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் நாராயணன்(51). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், நேற்று வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து பணகுடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story