இந்திய அரசியலமைப்பு தினம்-விழிப்புணர்வு பேரணியை மாவட்ட நீதிபதி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்திய அரசியலமைப்பு தினம்-விழிப்புணர்வு பேரணியை மாவட்ட நீதிபதி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்திய அரசியலமைப்பு தினம்-விழிப்புணர்வு பேரணியை மாவட்ட நீதிபதி கொடி அசைத்து துவக்கி வைத்தார். கரூர் மாவட்டம், பசுபதி பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில், இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடும் வகையில், மாணாக்கர்கள் பங்கேற்ற சட்ட விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான சண்முக சுந்தரம் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றபட்ட நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக இன்று இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டாடப்பட்டது. பேரணியின் போது, சட்டப்படி ஆட்சி நடக்கும் நம் நாட்டில் சட்டத்தை மதித்து நடப்போம் என கோஷங்களை எழுப்பி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் அனுராதா மேற்கொண்டார். இந்த பேரணியானது பசுபதிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவடைந்தது.
Next Story