உள் ஒதுக்கீட்டில் திருமாவளவன் இரட்டை வேடம் போடுவதாக ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் குற்றச்சாட்டு..
Rasipuram King 24x7 |26 Nov 2024 12:15 PM GMT
உள் ஒதுக்கீட்டில் திருமாவளவன் இரட்டை வேடம் போடுவதாக ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் குற்றச்சாட்டு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் ஆதித்தமிழர் பேரவையின் மேற்கு மண்டல செயற்குழு கூட்டமானது நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.அதனை தொடர்ந்து அதியமான் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது 2009 ஆம் ஆண்டு 18 சதவீதம் பட்டியலை இனத்திற்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கினார். இதை எதிர்த்து சிலர் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கண்டுபிடித்து உள் ஒதுக்கீடு வழங்கலாம் என தீர்ப்பு வழங்கியது வரவேற்கத்தக்கது. இந்த தீர்ப்பை ஆதித்தமிழர் பேரவை வரவேற்கிறது, முதல்வரை நேரில் சந்தித்து பாராட்டினோம். விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார் மேலும் உள் ஒதுக்கீடு தமிழகத்தில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். உள் ஒதுக்கீடு குறித்து ஆராய நீதியரசர் ஜனார்த்தனன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது கிருஷ்ணசாமி, திருமாவளவன் உள் ஒதுக்கீடு எதிர்த்து அந்த குழுவில் மனு கொடுத்துள்ளார்கள். தற்போது தமிழகத்தில் ஒதுக்கீடு ஆதரித்து பேசும் திருமாவளவன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். உள் ஒதுக்கீட்டில் குறித்து திருமாவளவன் நிறுத்தி வைக்க கோரிக்கை வைத்துள்ளார் எனவே திருமாவளவன் இரட்டை வேடம் போடுகிறார். பட்டியலை இன மக்களுக்கான துறையை ஆதிதிராவிடர் நலத்துறை என்ற பெயர் வைத்துள்ளனர் பட்டியல் இனத்தில் உள்ள 76 ஜாதிகளின் ஒரு ஜாதியின் பெயரை எப்படி வைக்கலாம். 44 ரிசர்வ் தொகுதியில் அருந்தியதற்கு 3 இடங்கள் மட்டுமே உள்ளது.7எம்பி சீட்டுகளில் ஒருவர் கூட அருந்ததியர் இல்லை துணைவேந்தர்கள் இல்லை மேயர் யாரும் இல்லை ஆனால் அருந்தியதற்கு எல்லாமே கொடுத்துவிட்டது போல் பரப்பி விடுகின்றனர். திருமாவளவன்,சீமான்,கிருஷ்ணசாமி ஆகியோர் அருந்ததியர் முன்னேற்றத்தை முடக்கி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் டிசம்பர் 23ஆம் தேதி மாபெரும் பேரணி பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம் எங்களுக்கு அரசியலிலும் பங்கு கேட்டு முதல்வரிடம் மனு கொடுக்க உள்ளோம் என ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் கூறினார்..
Next Story