கரூரில் மதுபான பாரில் காலையிலேயே மது அருந்திவிட்டு போதையான இளம்பெண் சாலையில் அலப்பறையில் ஈடுபட்டதால் பரபரப்பு .

கரூரில் மதுபான பாரில் காலையிலேயே மது அருந்திவிட்டு போதையான இளம்பெண் சாலையில் அலப்பறையில் ஈடுபட்டதால் பரபரப்பு .
கரூரில் மதுபான பாரில் காலையிலேயே மது அருந்திவிட்டு போதையான இளம்பெண் சாலையில் அலப்பறையில் ஈடுபட்டதால் பரபரப்பு . கரூர் பேருந்து நிலையத்திற்கு வெளியே, மேற்கு பிரதட்சணம் சாலையில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு அருகிலேயே அரசு அனுமதி பெற்ற பார் உள்ளது. இந்த நிலையில் அரசு அனுமதித்த நேரத்தை மீறி சட்டவிரோதமாக இன்று காலையிலேயே அந்த பாரில் மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளது. அந்த பாரில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், மதுபானம் அருந்திவிட்டு வெளியே வந்து, சத்தம் போட்டு பேசிக்கொண்டு அலப்பறையில் ஈடுபட்ட சம்பவத்தால், அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். தகவலறிந்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது,தான் பல்லடத்தைச் சேர்ந்தவர் என்று கூறிய அந்த இளம்பெண், மதுபோதையில் தன்னுடன் வந்த நபர் 5000 ரூபாயை பறித்துச் சென்றதாக கூறி, அந்த நபரை அழைத்து வரச் சொல்லி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு நேராக சென்று புகார் தெரிவிப்பேன் என்று அந்த பேசியதை அங்குள்ளவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நிலையில், அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட அந்த பெண்ணை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story