கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியை பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
Namakkal (Off) King 24x7 |26 Nov 2024 2:24 PM GMT
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, ரூ.75.00 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாநகராட்சி, திண்டமங்கலத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் நெடுஞ்சாலை துறையின் சார்பில், ரூ.75.00 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் நெடுஞ்சாலை க(ம)ப கோட்டம், நாமக்கல் நெடுஞ்சாலை உட்கோட்டத்திற்குட்பட்ட நாமக்கல் - திண்டமங்கலம் கீரம்பூர் சாலையானது நாமக்கல் நகர் ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து கீரம்பூரில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) இணைகிறது. மேலும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) முதல் நாமக்கல்-திருச்செங்கோடு சாலையை இணைக்கும் முக்கிய சாலையாகும். இச்சாலை தேசிய நெடுஞ்சாலை கீரம்பூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், பள்ளி பேருந்துகள், கல்லூரி பேருந்துகள் மற்றும் கோழி தீவன லாரிகள் அதிக அளவில் வாகன போக்குவரத்து நிறைந்த மிக முக்கியமான மாவட்ட இதர சாலையாகும். இச்சாலையில் தார்சாலை 3.75மீ அகலம் உடையது. இச்சாலையில் 5 இடங்களில் உள்ள குறுகலான பகுதி, பள்ளமான பகுதி மற்றும் வளைவான பகுதிகளில் ரூ.75.00 இலட்சம் மதிப்பீட்டில் நாமக்கல் – திண்டமங்கலம் – கீரம்பூர் சாலையில் சிமெண்ட் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியர் நாமக்கல் – திண்டமங்கலம் – கீரம்பூர் சாலையில் தலா ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் 2 இடங்களில் 60.00 மீ நீளத்திற்கு சிமெண்ட் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், நாமக்கல் – திண்டமங்கலம் – கீரம்பூர் சாலையில் தலா ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் 3 இடங்களில் சிமெண்ட் கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. முன்னதாக, மாவட்ட ஆட்சியர் நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கூட்டுறவுத்துறையின் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருவதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Next Story