மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை.

X
Paramathi Velur King 24x7 |26 Nov 2024 8:28 PM ISTமரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பரமத்தி வேலூர், நவ.26: பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான எஸ் . வாழவந்தி, பெரிய கரசபாளைய ம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள் ளது. இவற்றை வியாபாரிகள் மொத் தமாக வாங்கி, புதன்சந்தை, புதுசத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புவர். கடந்த வாரம் ஜவ்வரிசி ஆலைக்கு செல்லும் மரவள்ளிகிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 500க்கு விற்றது. தற்போது, டன் ஒன்றுக்கு, ரூ.1,250 ரூபாய் வரை குறைந்து, ரூ.6,250 ரூபாய்க்கு விற்கிறது. மரவள் ளிக்கிழங்கு விலை சரிவால் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Next Story
