சிலம்பொலி செல்லப்பன் பேத்தி திருமணம் !முதல்வருக்கு அழைப்பு.

டிசம்பர் 5 ஆம் தேதி வியாழக்கிழமை சேலம் சூரமங்கலம் பிரதான சாலையில் உள்ள மெய்யனூர் ஸ்ரீ வரலட்சுமி மஹாலில் திருமணம் நடைபெற உள்ளது,
நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையம் மறைந்த முனைவர் சிலம்பொலி செல்லப்பன் - செ.செல்லம்மாள், கூடச்சேரி மறைந்த செங்கோடன் பாப்பாயி மகள் வழி பேத்தியும் செ.கொங்குவேள் மருத்துவர் செ.ஈஸ்வரி மகள் செல்வி யாழினி செல்லம் கொங்குவேள் க்கும், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் மறைந்த முனைவர் ஆறுமுகம் - முத்துலட்சுமி, நரசிபுரம் மறைந்த சிவசுப்பிரமணியம் - முத்துலட்சுமி மகள் வழி பேரனும், முனைவர் செல்வகுமார் - அகிலாண்டேஸ்வரி மகனுமான சிவேஷ் செல்வகுமாருக்கும் வருகிற டிசம்பர் 5 ஆம் தேதி வியாழக்கிழமை சேலம் சூரமங்கலம் பிரதான சாலையில் உள்ள மெய்யனூர் ஸ்ரீ வரலட்சுமி மஹாலில் திருமணம் நடைபெற உள்ளது, இத்திருமணத்திற்கான அழைப்பிதழை சிலம்பொலி செல்லப்பனார் மகன் கொங்குவேள் செல்லப்பன் சென்னையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க .ஸ்டாலினை சந்தித்து அழைப்பிதழை வழங்கி வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியின் போது பி.ஜி.பி கல்வி குழும தலைவர் பழனி ஜி.பெரியசாமி உடன் இருந்தார்.
Next Story