துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள். கரூர் திமுக மாணவர் அணி சார்பில் அன்னதானம் நடைபெற்றது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள். கரூர் திமுக மாணவர் அணி சார்பில் அன்னதானம் நடைபெற்றது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள். கரூர் திமுக மாணவர் அணி சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூரில் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சரவண மூர்த்தி தலைமையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் வடக்கு நகர செயலாளர் கணேசன்,மாநகராட்சி மண்டல தலைவர் கோல்டு ஸ்பாட் ராஜா, தெற்கு நகர செயலாளர் சுப்பிரமணி,மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் அருண்குமார், கார்த்திகேயன், திவாகர்,செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோவில் முன்பு திரண்டு இருந்த பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி கட்சியினர் கோஷமிட்டனர்.
Next Story