சபரிமலை ஐயப்பன் குறித்து சர்ச்சையான பாடல்: கானா பாடகர் இசைவாணி, திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் மீது நாமக்கல் எஸ்.பி அலுவலகத்தில் பாஜகவினர் புகார் மனு.
Namakkal King 24x7 |27 Nov 2024 12:54 PM GMT
இந்த பாடல் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் கடவுள் நம்பிக்கையை சிதைக்கும் வகையிலும் உள்ளது.
சபரிமலை ஐயப்பன் குறித்து சர்ச்சையான பாடல் பாடியதாக கானா பாடகர் இசைவாணி மீதும் அந்த பாடலை வெளியிட்ட இயக்குனர் பா.ரஞ்சித்தின் "நீலம் பண்பாட்டு குழு" மீதும் புகார்கள் எழுந்தன. இந்த சூழலில், நாமக்கல் மாவட்ட பாஜகவின் ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு குழு சார்பில் மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் பாஜகவினர் நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது..... ஐயப்பன் சுவாமியை அவமரியாதை செய்யும் விதமாகவும் இழிவு படுத்துவிதமாக கானா பாடகர் இசைவாணி பாடி அதனை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடல் உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் கடவுள் நம்பிக்கையை சிதைக்கும் வகையிலும் உள்ளது. எனவே கானா பாடகர் இசைவாணி மற்றும் சினிமா இயக்குனர் பா.ரஞ்சித் மீதும் வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளனர். இந்த நிகழ்வில் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மனோகரன், மாவட்ட பொதுச்செயலாளர் முத்துகுமார், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் பிரதீஸ், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் ராம்குமார் மற்றும் பாஜக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்
Next Story