கோபி அருகே சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலி

கோபி அருகே சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலி
கோபி அருகே சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலி
கோபி அருகே சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலி பெண் உள்பட 2 பேர் காயம் கோபி அருகே சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலியானார். பெண் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.கட்டிட தொழிலாளி ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்த வர் குமாரசாமி (வயது 60). கட்டிட தொழிலாளி. இவர் கோபி அருகே சுட்டிக்கல் மேடு என்னும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஓடுகளை மாற்றும் பணியில் த ஈடுபட்டார். அவருடன் 5 குரும்பபாளையத்தைசேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி தனலட்சுமி (38) மற்றும் முருகேசன் ஆகியோரும் இந்த பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வீட்டின் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த இரும்பு கம்பி எதிர்பாராத விதமாக சுவரோடு இடிந்து கீழே விழுந்தது. சாவு இதில் கீழே நின்று கொண்டிருந்த குமாரசாமி, தனலட்சுமி, முருகேசன் ஆகியோர் மீது சுவர் விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்கள் 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த னர். ஆனால் செல்லும் வழி யிலேயே குமாரசாமி பரிதாபமாக உயிரிழந்தார். தனலட்சுமி, முருகேசன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story