ஆண்டிபட்டி அருகே ஆட்டோ மோதி இருவர் காயம்

X
ஆண்டிபட்டி அருகே அனுப்பப்பட்டியைச் சேர்ந்தவர் வேங்கையன் 43, அரசு போக்குவரத்து கழக டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன் தினம் தனது டூவீலரில் அதே ஊரைச் சேர்ந்த ராஜா 34, என்பவரை பின்னால் உட்கார வைத்து ஆண்டிபட்டி வழியாக தேனி நோக்கி சென்றார். தேனி மெயின் ரோட்டில் சண்முகசுந்தரபுரம் அருகே சென்ற போது பின்னால் சென்ற அடையாளம் தெரியாத ஆட்டோ, டூவீலரில் மோதி சென்று விட்டது. டூவீலரில் சென்ற இருவரும் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story

