அமமுக சார்பில் பாமக நிர்வாகிகளுக்கு வாழ்த்து..

அமமுக சார்பில் பாமக நிர்வாகிகளுக்கு வாழ்த்து..
அமமுக சார்பில் பாமக நிர்வாகிகளுக்கு வாழ்த்து..
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் உயர்திரு ராமதாஸ் அவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தரை குறைவான வார்த்தையால் பேசியதை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல் துறையினர் கைது செய்து அரிமா சங்க தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.இவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தும் மற்றும் ஆறுதல் சொல்ல வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் டிடிவி. தினகரன் அவர்கள் ஆணைக்கிணங்க கழகத்தின் துணை பொது செயலாளர் கொங்கு மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் C.சண்முகவேல் அவர்களின் ஆலோசனைப்படியும். கைது செய்யப்பட்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஓ.பி.பொன்னுசாமி அவர்களையும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் M. வடிவேலன் அவர்களையும், கட்சியின் மாணவரணி செயலாளர் டி. பாலு மற்றும் கட்சியின் நிர்வாகிகளையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நாமக்கல் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஏ.பி. பழனிவேல், அவர்கள் சந்தித்து ஆறுதலும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்தார். இதில் மாவட்ட கழக அவை தலைவர் எஸ்.பன்னீர்செல்வம் , ராசிபுரம் கிழக்கு நகர செயலாளர் டி. தர்மராஜ், முன்னாள் கவுன்சிலர் செல்வம், சக்திவேல், சண்முகம், வெற்றி செல்வன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story