எடப்பாடியில் தமிழக முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் கைது
Edappadi King 24x7 |27 Nov 2024 5:27 PM GMT
சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையம் எதிரே நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்டனர்
எடப்பாடியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினரை போலீசார் கைது செய்ததால் பெரும் பரபரப்பு.... பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லமால், தினமும் ஏதாவது அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார் என்றும், அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்த கருத்துக்கு பாமக கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை கிளம்பியது. இதனை அடுத்து அக்கட்சியின் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் எதிரே பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸை இழிவாக பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்து சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் கலந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாமகவினர் 100 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story