கடல் நீர் கரைக்கு வந்துள்ளதால் மீனவர்கள் அச்சத்துடன் உள்ளனர்!

நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகாமையில் ஆர் புதுப்பட்டிணம் மற்றும் முத்துக்குடா கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் வசித்து வருகிறார்கள் அவர்களதுவாழ்வாதாரம் தினசரி கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருவது தான் அவர்களின் வேலை அந்த மீன்களை கொண்டு வந்து விற்றால்தான் அவர்கள் குடும்பத்தை நடத்த முடியும் அவர்கள் கடந்த மூன்று தினங்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர் இன்று காலை முதல் கடலில் மூன்றடிக்கு மேல்கடல் நீர் மேலே வந்துள்ளது அவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நாட்டு படகுகள் தரையில்தான் நிறுத்தி இருந்தார்கள் ஆனால் தற்பொழுது தண்ணீரில் உள்ளது அதேபோல் மழை பெய்தால் வெளியில் இருந்து ஆற்றில் வரும் நீர் வரத்து இல்லாததால் கடல் நீர் அந்த நீர் வரும் வழியில் ஆற்றில் மேலே வருகிறது இதுவரை இந்த நிகழ்வு நடந்ததில்லை என்று அப்பகுதியில் உள்ள மீனவர்கள் கூறுகின்றனர்
Next Story