திருப்பத்தூர் சந்தன மரம் வெட்டி கடத்த முயற்சி
Tirupathur King 24x7 |28 Nov 2024 8:37 AM GMT
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2 சந்தன மரங்கள் வெட்டி கடத்த முயற்சி!. வனத்துறை, வருவாய் துறை, காவல்துறை தீவிர விசாரணை.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2 சந்தன மரங்கள் வெட்டி கடத்த முயற்சி!. வனத்துறை, வருவாய் துறை, காவல்துறை தீவிர விசாரணை. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த இடத்தில் கட்டப்பட்டது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் சிறிய சிறிய சந்தன மரங்கள் வளர்ந்து வருகிறது. இதனைக் கண்ட சமூக விரோதிகள் இரவு நேரத்தில் சந்தன மரத்தை ரம்பம் கொண்டு அறுத்து கடத்த முயற்சித்துள்ளனர். கட்டிடப் பணிகளுக்காக அதே இடத்தில் தங்கி பணிபுரியும் வடமாநிலத்தவர்கள் கத்தி கூச்சலிட்ட காரணத்தினால் சமூகவிரோதிகள் சுற்றுச்சுவர் மீதுஏறி குதித்து தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட மூன்று துறை அரசு அதிகாரிகள் சந்தனமரம் வெட்டி கடத்த முயற்சித்த கும்பல் குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளனர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே சந்தன மரங்களை வெட்டி கடத்த முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story