மலைவீதி ரவுண்டானா அருகே டூவீலர் மீது ஆம்னி ஆம்புலன்ஸ் மோதி விபத்து. முதியோர் படுகாயம்.

மலைவீதி ரவுண்டானா அருகே டூவீலர் மீது ஆம்னி ஆம்புலன்ஸ் மோதி விபத்து. முதியோர் படுகாயம்.
மலைவீதி ரவுண்டானா அருகே டூவீலர் மீது ஆம்னி ஆம்புலன்ஸ் மோதி விபத்து. முதியோர் படுகாயம். கரூர் மாவட்டம், மூலிமங்கலம், காகிதபுரம், புதிய குறுக்கு சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜ் வயது 62. இவர் நவம்பர் 25ஆம் தேதி காலை 7:30 மணியளவில் வேலாயுதம்பாளையத்தில் இருந்து டிஎன்பிஎல் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வேலாயுதம்பாளையம், காந்திநகர், இரண்டாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் சந்தோஷ் குமார் வயது 20 என்பவர் வேகமாக ஓட்டி வந்த ஆம்னி ஆம்புலன்ஸ் வேன், ராஜ் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் டூவீலருடன் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜுக்கு வலது கால் மற்றும் பாதத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜ் அளித்த புகாரின் பேரில்,சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஆம்புலன்ஸ் ஆம்னி வேனை, வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஒட்டி விபத்து ஏற்படுத்திய சந்தோஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story