கரூரில்,அதாணியை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
Karur King 24x7 |28 Nov 2024 1:46 PM GMT
கரூரில்,அதாணியை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
கரூரில்,அதாணியை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு, மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், சூரிய ஒளி மின்சாரம் வழங்கும் திட்டத்தில் பல்லாயிரம் கோடி கைமாறிய லஞ்சம் தொடர்பாகவும், ஊரை அடித்து உலையில் போடும் அதாணியை கைது செய்ய வலியுறுத்தியும், அவர் மீது சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜோதிபாசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் முருகேசன், உள்ளிட்ட மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, அதாணி நிறுவனத்திற்கு எதிராகவும், லஞ்ச ஊழலுக்கு எதிராகவும், அதாணியை கைது செய்ய வலியுறுத்தியும், சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Next Story