மத்திய, மாநில அரசின் வரி உயர்வைக் கண்டித்து பரமத்தி வேலூரில் நாளை முழு கடையடைப்பு.
Paramathi Velur King 24x7 |28 Nov 2024 2:10 PM GMT
மத்திய, மாநில அரசின் வரி உயர்வைக் கண்டித்து பரமத்தி வேலூரில் நாளை முழு கடையடைப்பு அனைத்து வணிகர்கள் சங்கம்.
பரமத்தி வேலூர், நவ 28: மத்திய அரசின் சேவை வரி மற்றும் மாநில அரசின் கடை உரிமக் கட்டணம், தொழில் வரி, சொத்து வரி உயர்வைக் கண்டித்து பரமத்தி வேலூரில் வெள்ளிக்கிழமை (நவ. 29) முழு கடையடைப்பு செய்யப்படும் அனைத்து வணிகர் கள் சங்கம் அறிவித்துள்ளது. பரமத்தி வேலூரில் அனைத்து வர்த்தக சங்கங்கள் சார்பில், வேலூர் நகர அனைத்து வர்த்தக சங்கத் தலைவர் சுந்தரம் தலை மையில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: டிச. 1-ஆம் தேதி முதல் கடைகளின் வாடகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித் துள்ளது. இதனால் சிறு, குறு வணிகர்கள் உள்பட அனைத்து வணிகர் களும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிப்படைவர். இந்த சேவை வரியை மத்திய அரசு கைவிட வேண்டும். இதே போல, மாநில அரசின் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 2025-2026-ஆம் ஆண்டு முதல் அமல்படுத்த உள்ள கடை உரிமக் கட்டணம், தொழில் வரி, சொத்து வரி உயர்வைக் கைவிட வேண் டும் என வலியுறுத்தி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் முழு கடையடைப்பு செய்வது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில், வேலூர் நகர அனைத்து வர்த்தக சங்கம், சிறு வணிகர்கள் சங்கம், சிமென்ட், இரும்பு, மரம், எலக்ட்ரிக்கல் சங் கம், ஹோட்டல் மற்றும் பேக்கரி வியாபாரிகள் சங்கம், தங்கம், வெள்ளி நகை வியாபாரிகள் சங்கம், பாத்திரக்கடை வியாபாரி கள் சங்கம், பரமத்தி வேலூர் தாலுகா மருந்து வணிகர்கள் சங் சும், தமிழ்நாடு சிமென்ட் ஆர்ட்டிகல்ஸ் மற்றும் பைப்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம், நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
Next Story