வணிகர் சங்கம் முழு கடை அடைப்புக்கு அதிமுக ஆதரவு. எம் எல் ஏ சேகர் அறிவிப்பு.

X
Paramathi Velur King 24x7 |28 Nov 2024 7:56 PM ISTபரமத்தி வேலூரில் வெள்ளிக்கிழமை வணிகர் சங்கம் சார்பில் முழு கடை அடைப்புக்கு அதிமுக மற்றும் பாமக ஆதரவு.
பரமத்தி வேலூர், நவ.28: மத்திய மாநில அரசின் வரி உயர்வை கண்டித்து அனைத்து வணிகர் சங்கம் சார்பில் பரமத்தி வேலூர் நகரில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் முழு கடை அடைப்புக்கு பொதுமக்கள் நலன் கருதி தொழில்வரி சொத்து வரி உயர்வை கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழு கடையடைப்பு நடத்தும் பரமத்தி வேலூர் நகர அனைத்து வர்த்தக சங்கத்திற்கு அதிமுக சார்பில் ஆதரவு தெரிவிப்பதாக பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பரமத்தி வேலூர் பாமக சார்பிலும்,பரமத்தி வேலூர் வட்டார போட்டோ வீடியோ சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Next Story
