கரூர்- த.வெ.க முதல் மாநில மாநாடு வெற்றியை தொடர்ந்து ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Karur King 24x7 |29 Nov 2024 6:21 AM GMT
கரூர்- த.வெ.க முதல் மாநில மாநாடு வெற்றியை தொடர்ந்து ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர்- த.வெ.க முதல் மாநில மாநாடு வெற்றியை தொடர்ந்து ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக வெற்றி கழகம் சார்பில், கடந்த மாதம் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக முழுவதும் இருந்து சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழக வெற்றி கழகம் நடத்திய இந்த மாநாடு தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளது. மாநாடு நிறைவு பெற்று ஒரு மாதம் நிறைவடைந்ததை தொடர்ந்து, இன்று கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் கரூர் காந்திகிராமம் பகுதியில் ரத்த தானம், கொடியேற்றுதல், அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டு சுமார் 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்து வருகின்றனர். மேலும் கட்சி உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு ஏற்பாட்டினை காந்திகிராமம் பொறுப்பாளர் பால்ராஜ் மேற்கொண்டு வருகிறார்.
Next Story