உறைவிட பள்ளியில் ஸ்கோப் திருவிழா

உறைவிட பள்ளியில் ஸ்கோப் திருவிழா
திருவிழா
திருக்கோவிலுார் உறைவிட நடுநிலைப் பள்ளியில் ஸ்கோப் திருவிழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவிற்கு, பள்ளி செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சவுந்தரி வரவேற்றார். மாவட்ட வானியல் மன்ற தலைவர் ஜானகிராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பெரிஸ்கோப், ஸ்டெதஸ்கோப், மைக்ரோஸ்கோப், போல்ட் ஸ்கோப், ஸ்டீரியோஸ்கோப், ஸ்பெக்ட்ராஸ்கோப், மொபைல் ஸ்கோப் மற்றும் கலைடாஸ்கோப் ஆகியவற்றை காட்சிப்படுத்தி, அவைகளின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். சிறந்த முறையில் கேள்வி கேட்ட மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். விடுதி காப்பாளர் பால்தாய் நன்றி கூறினார்.
Next Story