திருப்பத்தூர் மீனாட்சி நிலையத்தில் பேருந்து நிறுத்தம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு
Tirupathur King 24x7 |30 Nov 2024 7:10 AM GMT
திருப்பத்தூர் மீனாட்சி நிலையத்தில் பேருந்து நிறுத்தம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மீனாட்சி நிலையத்தில் பேருந்து நிறுத்தம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்கு பல்வேறு சுற்று வட்டார பகுதியில் இருந்து நகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் பொதுமக்கள் திருப்பத்தூர் நகரத்திற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் மீனாட்சி தியேட்டர் அருகே பஸ் நிறுத்தம் செயல்பட்டு வந்தது. கடந்த ஆண்டு முதல் பஸ் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டது. பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். அதனால் இன்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். உடன் போக்குவரத்து வட்டார அலுவலர், நெடுஞ்சாலை துறை அலுவலர், வருவாய் துறை என அனைத்து துறை அலுவலர்களும் இருந்தனர்.
Next Story