தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது

தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது
அறிவியல் கண்காட்சியில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ மாணவியர்
ஈரோடு சாலையில் அமைந்துள்ள நந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், அறிவியல் கண்காட்சி சனிக்கிழமையன்று நடைபெற்றது . பள்ளியின் முதல்வர் இ.ராஜேஷ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பள்ளியின் தலைவர் மற்றும் தாளாளர் டாக்டர் C.N .ராஜா மற்றும் செயலர் நந்தி C. மோகன் அவர்கள் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் வகையில் வாழ்த்துரை வழங்கி அவர்களின் படைப்புத்திறனை பார்வையிட்டு ஊக்கப்படுத்தினார்கள். மேலும் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் P. சசிக் குமார் அவர்கள் அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில் கலந்துரையாடி, மாணவர்களின் அறிவுப்பூர்வமான வினாக்களுக்கு விடையளித்தார். ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் R. கேசவ் குமார் அவர்கள் , மாணவர்களின் கல்வி மேன்மை பற்றியும் ஒழுக்கத்தை பற்றியும் சிறப்புரையாற்றினார்.இந்த நிகழ்வில் மாணவ மாணவியர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
Next Story