சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு

முறையாக பேருந்துகள் நின்று செல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்
பள்ளிபாளையம் திருச்செங்கோட்டை இணைக்கும் முக்கிய பகுதியாக ஐந்து பனை பகுதி உள்ளது. சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் ஏராளமான நூற்பாலைகள், கார்மெண்ட்ஸ், விசைத்தறி, விவசாயப்பணி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் உள்ள நிலையில், தினந்தோறும் ஏராளமான கல்லூரி மாணவ ,மாணவியர் திருச்செங்கோடு நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு செல்லும் தனியார் பேருந்துகள் பெரும்பாலும் நின்று செல்வதில்லை. இதனால் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து அவதி அடைந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை அன்று  மாலை ஐந்துபனை பகுதியில் ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற ஒரு தனியார் பேருந்து நிற்காததால் கோபமடைந்த அப்பகுதி சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள், திடீரென ஒன்றன்பின் ஒன்றாக வந்த தனியார் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் பொதுமக்களை சமரசம் செய்தனர்.
Next Story