கழிவுநீர் வாய்க்கால் அமைக்க பள்ளம்தோண்டி பணிகள் மேற்கொள்ளாமல் இருப்பதை கண்டித்து,அதிமுக கவுன்சிலர் பேரூராட்சி கூட்டம் நடக்கும் போதே தரையில் படுத்து போராட்டம்
Andippatti King 24x7 |30 Nov 2024 12:27 PM GMT
கழிவுநீர் வாய்க்கால் அமைக்க கடந்த 9 மாதங்களுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டு, டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் கழிவுநீர் வாய்க்காலுக்கான பள்ளத்தை மட்டுமே தோண்டி அப்படியே பணிகளை மேற்கொள்ளாமல் விட்டுச்விட்டு சென்று உள்ளார்
கழிவுநீர் வாய்க்கால் அமைக்க பள்ளம்தோண்டி 9 மாதங்களாக பணிகள் மேற்கொள்ளாமல் இருப்பதை கண்டித்து, ஆண்டிபட்டி அதிமுக கவுன்சிலர் பாலமுருகன் பேரூராட்சி கூட்டம் நடக்கும் போதே தரையில் படுத்து போராட்டம் . தேனிமாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி மன்றத்தில் சாதாரண க்கூட்டம் நேற்று பேரூராட்சி அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக பேரூராட்சி தலைவர் சந்திரகலா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜோதி, செயல் அலுவலர் வினிதா முன்னிலை வகித்தனர் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது மூன்றாவது வார்டு அதிமுக கவுன்சிலர் பாலமுருகன் தனது 3வது வார்டு பாப்பம்மாள்புரம் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க கடந்த 9 மாதங்களுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டு, டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் கழிவுநீர் வாய்க்காலுக்கான பள்ளத்தை மட்டுமே தோண்டி அப்படியே பணிகளை மேற்கொள்ளாமல் விட்டுச்விட்டுச் சென்று விட்டதாக புகார் கூறினார். இதனால் கழிவுநீர் வாய்க்காலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர் கடந்த பலமாதங்களாக தேங்கி பெரும் சுகாதாரக் கேடு ஏற்பட்டு பலவித தொற்று நோய்களும் பரவி வருகின்றன என்றும், இதனால் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிபெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் நோய்வாய்ப்பட்டு வருகின்றனர் என்றும், இதுகுறித்து பலமுறை ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்திடமும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரிடமும் பலமுறை புகார் கூறியும் இதுவரை பணிகளை மேற்கொள்ளவில்லை என்றும் கூறி கூட்டம் நடந்து கொண்டிருந்த பேரூராட்சி கூட்ட அரங்கில் இருக்கையில் இருந்து எழுந்து தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தனது கோரிக்கைக்கு உரிய பதில் அளித்து பணிகளை மேற்கொள்ள உறுதி அளிக்கும்வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கூறி கூட்டம் நடந்து கொண்டிருந்த கூட்டத்தில் கவுன்சிலர் பாலமுருகன் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
Next Story