எர்ணாபுரத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்!-நாமக்கல் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
Namakkal King 24x7 |30 Nov 2024 1:26 PM GMT
இந்த மருத்துவ முகாமில் 1022 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து மருத்துவ ஆலோசனை, சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், இலவச மருத்துவ முகாம், எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்ட ஊட்டச்சத்து காய்கறி கண்காட்சியையும் அவர் திறந்து வைத்தார்.மருத்துவ அலுவலர் டாக்டர் மாலதி மற்றும் மருத்துவக் குழுவினர் முகாமில் கலந்து கொண்டு, 1022 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள், செய்து மருத்துவ ஆலோசனை, சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் நாமக்கல் அட்மா குழு தலைவர் பழனிவேல், மருத்துவ அலுவலர் சிவதர்சினி, சித்த மருத்து அலுவலர் பூபதிராஜா, சுகாதார மேற்பார்வையாளர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர்கள் ராஜகணபதி, கார்த்திக் , கௌதம், அப்துல் ரஜீன், பிடிஓ பிரபாகரன், பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் மாரப்பன், நலங்கிள்ளி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story