பரமத்தி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை கொள்ளை:

பரமத்தி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை கொள்ளை:
பரமத்தி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகையை கொள்ளை அடித்துச் சென்ற மருமகன் அவர்கள் குறித்து போலீசார் விசாரணை.
பரமத்தி வேலூர், நவ.30: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள தேவிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் லாரி டிரைவர் இவரது மனைவி சவிதா இவர்கள் தேவிபாளையம் அருகே தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். லாரி டிரைவர் மோகன் நேற்று முன்தினம் பணிக்கு சென்று இருந்த நிலையில்,நேற்று முன்தினம் இரவு சவிதா வீட்டில் தனியாக இருந்து ள்ளார். இரவு சுமார் 9 மணிக்கு வீட்டிற்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் சவிதாவை வீட்டிற்குள் தள்ளி கைகளை கட்டி கத்தியை காட்டி மிரட்டி, 5 அவர் கழுத்தில் அணிந்திருந்த 7.5 பவுன் தங்க தாலிக்கொடி, மோதிரம், தோடு மற்றும் பீரோவில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து கொண்டு சவிதாவின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து சென்றுள்ளனர். இதனை அடுத்து பாட்டி வீட்டில் இருந்து வந்த மோகனின் மகன் தனது தாயார் மயங்கி கிடப்பதைக் கண்டு பாட்டியிடம் தெரிவித்துளார். உடனடியாக அவர் அருகில் இருந்தவர்களை அழைத்து தண்ணீர் தெளித்து அவரை எழுப்பி விசாரித்ததில் மர்ம நபர்கள் இருவர் அவரை வீட்டிற்குள் தள்ளி கையைக் கட்டி கத்தியை காட்டி மிரட்டி தாலிக்கொடி மற்றும் நகை பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. சம்பவம் குறித்து பரமத்தி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story