மோகனூர் அருகே வாக்கிங் போனவர்கள் மீது ஆம்னி வேன் மோதி மூவர் பலி!-இன்று அதிகாலை பயங்கரம்!

மோகனூரில் நடைப்பயிற்சி சென்றபோது ஆம்னி வேன் மோதி மூவர் உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இன்று (டிசம்பர் -1) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் காட்டூர் பெட்ரோல் பங்க் அருகே நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த மலையப்பன் (70) நிர்மலா(55) செல்லம்மாள்(65) ஆகியோர் மீது அந்த வழியில் மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்த ஆம்னி வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிர் இழந்தனர், வாகனத்தை ஒட்டி வந்த மணிகண்டனை மோகனூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்,இறந்த மூவரின் உடலை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.நடைப்பயிற்சி சென்றவர்கள் மூவர் ஒரே நேரத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் மோகனூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story