திமுக வழக்கறிஞர் பிரிவு சார்பாக காலை உணவு மற்றும் வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டது ..

X
Edappadi King 24x7 |1 Dec 2024 10:16 AM ISTசேலம் மாவட்டம் எடப்பாடி அருகே முதியோர் இல்லத்தில் திமுக வழக்கறிஞர் பிரிவு சார்பாக காலை உணவு மற்றும் வேஷ்டி, சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது ..
தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு எடப்பாடி அருகே முதியோர் இல்லத்தில் திமுக வழக்கறிஞர் பிரிவு சார்பாக காலை உணவு மற்றும் வேஷ்டி, சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .. தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம், சமுத்திரம் ஊராட்சியிலுள்ள அன்பு முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியோர்கள் அனைவருக்கும் நவ-30 சேலம் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் அதன் அமைப்பாளர் செல்லப்பன் தலைமையில் காலை உணவு மற்றும் பெட்ஜெட், சேலை, வேஷ்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனை பெற்றுக் கொண்ட முதியோர் இல்லத்தின் நிர்வாகத்தினர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தனர். அப்போது மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் செல்லப்பன், அரசு வழக்கறிஞர்கள் சங்ககிரி கிரிஸ்டோபர், எடப்பாடி சரவணமூர்த்தி, மேட்டூர் குழந்தைவேல், மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலரும் உடனிருந்தனர்.
Next Story
